ஆந்திராவில் வைரலாகும் துணை பெண் முதல்-மந்திரியின் டிக் டாக் வீடியோ!

ஐதராபாத்,

ஆந்திராவில் சில மாதங்களுக்கு முன்பு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இதனைத்தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி   பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி  வருகிறார்.  மேலும், 5 துணை முதல்-மந்திரிகளையும்  நியமித்தார். 

அதில், ஒரு துணை முதல்-மந்திரியாக இருப்பவர் புஷ்பா ஸ்ரீவாணி. இவர் சமீபத்தில், 'ராயலசீமா முட்டுபிடா மன ஜெகன் அண்ணா' என்ற பாடலுக்கு முக பாவனைகளுடன் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் வைரலாகி உள்ளது. புஷ்பா ஸ்ரீவாணி பழங்குடியினர் நலவாழ்வு துறை மந்திரியாகவும் உள்ளார். 

இந்நிலையில், ஒரு துணை முதல்-மந்திரியாக இருந்து கொண்டு அநாகரீகமாக 'டிக் டாக்' வீடியோ வெளியிட்டது பொறுப்பற்ற செயல் என இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

Google+ Linkedin Youtube