அசாமில் நாளை இலங்கைக்கு எதிரான டி20 போட்டி; ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

கவுகாத்தி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் என்.ஆர்.சிக்கு எதிராகவும் அசாமில்  முதன்  முதலில் போராட்டங்கள் வெடித்தன. குடியுரிமை திருத்தம் சட்டம் அமல்படுத்தினால், தங்களின் கலாச்சாரம், மொழிக்கு பாதிப்புக்கு ஏற்படும் என அஞ்சும் அசாம் பூர்வக்குடி மக்கள், இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதனால், அசாமில் அமைதியின்மை நிலவி வருகிறது. 

இந்த சூழலில், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.  முதல் டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள  பரஸ்பரா மைதானத்தில் நடைபெறுகிறது. அசாமில் தொடர் போராட்டங்களால், திட்டமிட்டபடி இந்தப் போட்டி நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு முதலில் எழுந்தது. 

இந்த நிலையில், திட்டமிட்டபடி கவுகாத்தில் முதல் டி20 போட்டி நடைபெறும் என்று அசாம் கிரிக்கெட் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.  அசாம் கிரிக்கெட் சங்க செயலாளர் தேவஜித் சைகியா செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது,  நாளை கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்கள், செல்போன், பர்ஸ் ஆகியவை மட்டுமே மைதானத்திற்கு கொண்டு செல்ல அனுமதி  அளிக்கப்படும். 

இதைத் தவிர வேறு எந்த பொருள்களையும் மைதானத்திற்குள் கொண்டு செல்லக்கூடாது. உணவு மற்றும் தண்ணீர் உள்ளேயே வழங்கப்படும்” என்றார்.  கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு கவுகாத்தியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube