பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் - மாநில தேர்தல் ஆணையர்

சென்னை,

மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ வாக்காளர் பட்டியலில் குளறுபடி என்பதை ஏற்க முடியாது, இந்திய தேர்தல் ஆணையத்தின் பட்டியலைத்தான் பயன்படுத்துகிறோம்.  25 பதவியிடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வரும் 6ம்தேதி காலை பதவி ஏற்பார்கள். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும். 

முன் எப்போதும் இல்லாத அளவு தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்ற‌து.  வாக்கு எண்ணிக்கை 100% நேர்மையாக நடைபெற்றது” என்றார். 

Google+ Linkedin Youtube