அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகம் என்பது கவுரவத்திற்கான அடையாளம்- டொனால்டு டிரம்ப்

கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல் இடத்தை வல்லரசு நாடான அமெரிக்கா தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

இங்கு இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 15 லட்சத்து 67 ஆயிரத்து 334  ஆகும். இங்கு பலியானவர்கள் எண்ணிக்கை 93 ஆயிரத்தை கடந்து விட்டது.

சரியாக 93 ஆயிரத்து 343 பேர் பலியாகி இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தரவு மையம் கூறுகிறது.

உலகின் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகள் அமெரிக்காவில் ஏற்பட்டு உள்ளது என்பது கவுரவத்திற்கான அடையாளம் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி டொனல்டு டிரம்ப் கூறியதாவது:-

மற்ற நாட்டை விட அதிகமான சோதனைகள் நடத்தியதால் தான் அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் உள்ளன.

அமெரிக்க பெரும்பாலான நாடுகளை விட மிகப் பெரிய நாடு, எனவே நிறைய பாதிப்புகல் இருக்கும்போது, நான் அதை ஒரு மோசமானதாக பார்க்கவில்லை, ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நான் அதை நல்ல விஷயமாக பார்க்கிறேன், ஏனென்றால் எங்கள் சோதனை மிகவும் சிறந்தது என்று அர்த்தம் என்று அவர் கூறினார்.

Google+ Linkedin Youtube