அதிகரிக்கும் கரோனா: மக்களை எச்சரிக்கும் ஈரான் அரசு

ஈரானில் கரோனா பரவல் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,000 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 81 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து ஈரானின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ கரோனா பரவல் இன்னும் முடிவடையவில்லை. அது முந்தைய நிலையைவிட வலுவாக வரும். நமது மக்கள் மருந்துவ நெறிமுறைகளை ஒழுங்காக பின்பற்றவில்லை என்றால் நாம் மோசமான இழப்புக்கு தயாராக வேண்டும்”என்று எச்சரித்துள்ளது.

திங்கட்கிழமை தகவலின்படி ஈரானில் சுமார் 1, 54,445 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 7,878 பேர் பலியாகி உள்ளனர்.

ஈரானின் அசர்பாய்ஜன், லோரிஸ்டன், பலுசிஸ்தான், சிஸ்டன் போன்ற பகுதிகள் கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று அதிகமானதைத் தொடர்ந்து ஈரானின் கிழக்குப் பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது.

ஈரானில் கரோனா பரவலாக இருக்கும் நிலையில் வழிபாட்டு தலங்களை திறக்க அந்நாட்டு அரசு சில தினங்களுக்கு முன்னர்தான் உத்தரவிட்டது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா தொற்றால் ஈரான் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஈரானில் பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கிய கரோனா மார்ச் மாதம் தீவிரத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது.


Google+ Linkedin Youtube