கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாள் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளில் ஆடம்பர நிகழ்ச்சிகள் வேண்டாம் என கட்சியினருக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி இன்று அவரது  நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மரியாதை  செலுத்தினர்.

அங்கு ஒரு ஜோடிக்கு ஸ்டாலின் தலைமையில் எளிய முறையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்களை ஸ்டாலின்,துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

50 ஆண்டுகள் ஒரு இயக்கத்தின் உயரம் குறையவிடாமல் கட்டிகாத்த, கருணாநிதியை, இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்விடுத்துள்ளார். சென்னை மெரினாகடற்கரையில் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செய்த பிறகு பேசிய அவர், எல்லா வழிகளிலும் உச்சத்தைதொட்ட பன்முக அரசியல் தலைவர் கருணாநிதி என பெருமிதம் தெரிவித்தார். முன்னதாக, கருணாநிதி நினைவிடத்தில் திருமணம் செய்து கொண்ட மணமக்களை ஆசீர்வாதம் செய்து வாழ்த்து கூறினார். 

Google+ Linkedin Youtube