பசியை விட கொரோனா வைரஸ் மேலானது; வேலைக்கு கிளம்பிய புலம்பெயர் தொழிலாளர்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  இதனால் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு உள்ளது.  நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.  இதனால் வேறு வேறு இடங்களில் பணிபுரிந்து, வசித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையின்றி, வருவாயுமின்றி தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.  அவர்களது நலனுக்காக மத்திய அரசு ஷ்ராமிக் ரெயில்களை இயக்கியது.

இதன்படி, உத்தர பிரதேசத்தில் 30 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.  மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் உத்தர பிரதேசத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிகளவிலான நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது என அரசு நேற்று தெரிவித்தது.

சிறு ஆலைகளில் 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் கூறியது.  எனினும், புலம்பெயர் தொழிலாளர்களில் பலர் தங்களது பழைய பணிக்கே திரும்பும் முடிவில் உள்ளனர்.

இதற்காக தியோரியா நகரில் அரசு பேருந்து நிலையத்தில் அவர்கள் குவிந்துள்ளனர்.  அங்கிருந்து பேருந்தில் ஏறி கோரக்பூர் ரெயில் நிலையம் செல்கின்றனர்.  அந்த ரெயில் நிலையத்தில் இருந்து மராட்டியம், குஜராத்திற்கு செல்வதற்கான ரெயில்களில் செல்ல முடிவு செய்துள்ளனர்.

இதுபற்றி மும்பை தொழிற்சாலையில் பணிபுரிந்த அன்சாரி என்ற தொழிலாளர் கூறும்பொழுது, உத்தர பிரதேசத்தில் வேலை இருப்பினும் நான் ஊர் திரும்ப போவதில்லை.  எனது நிறுவனம் பணியை தொடங்கவில்லை.  ஆனாலும், என்னால் இயன்ற வேலையை தேடி நான் செல்கிறேன்.  பசியை விட கொரோனா மேலானது.  என்னுடைய குழந்தைகள் கொரோனாவுக்கு பலியாவதற்கு பதில் நான் இறப்பது மேலானது என்று கூறியுள்ளார்.

Google+ Linkedin Youtube