எந்த மாநிலத்திலிருந்தும் ஷ்ரமிக் சிறப்பு ரயில்களுக்கான கோரிக்கை இல்லை: ரயில்வே தகவல்

எந்த ஒரு மாநிலத்திலிருந்தும் ஷ்ரமிக் சிறப்பு ரயில்களுக்கான கோரிக்கைகள் இல்லை என்று ரயில்வே திங்களன்று தெரிவித்துள்ளது.

“ஒரேயொரு ரயிலுக்கான கோரிக்கை கர்நாடாகாவிடமிருந்து வந்தது, அந்த ரயில் இன்று ஓடியது. பெங்களூரிலிருந்து முசாபர்பூருக்கு இந்த ரயில் இயக்கப்பட்டது. நாளை இதே ரயிலுக்கான கோரிக்கை இல்லை. மாநில அரசுகள் கேட்டால் ஷ்ரமிக் ரயில்களை இயக்குவோம்” என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மே 1ம் தேதி முதல் 4,596 ஷ்ரமிக் ரயில்கள் இயக்கப்பட்டன. ஜூன் மாதம் முதல் ஷ்ரமிக் ரயில்களுக்கான கோரிக்கை குறிப்பிடத்தகுந்த அளவில் குறைந்தது. மே 31ம் தேதி 69 ஷ்ரமிக் ரயில்களை இயக்கியது, ஆனால் அடுத்த நாளே 100 ரயில்களுக்கும் மேல் இயக்கப்பட்டன.

ஷ்ரமிக் ரயில்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கும் சொந்த ஊர்களுக்கும் செல்ல இயக்கப்பட்டது.

ஜூன் 1 முதலான 200 மெய்ல்/எக்ஸ்ப்ரஸ் சிறப்பு ரயில்கள் மூலம் ரயில்வேவுக்கு ரூ.20-22 கோடி வருவாய் கிட்டியுள்ளது.

அதே போல் ராஜ்தானி தடங்களில் இயக்கப்பட்ட 15 ஜதை ஏ/சி ரயில்களில் 80% பயணிகள் பயணித்தனர்.

ஷ்ரமிக் ரயில்களுக்கான தேவை குறைந்துள்ளது என்று கூறிய ரயில்வே, மும்பை, அகமதாபாத், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு பிஹார், உ.பி. மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் ரயில்களில் 1005 பயணிகள் பயணம் செய்தனர்.

இதுவரை இயக்கிய 4,596 ஷ்ரமிக் சிறப்பு ரயில்களில் இந்த 3 மாநிலங்களிலிருந்து பயணித்தவர்கள் 81% மக்கள் ஆவார்கள்.

ரத்து செய்யப்பட்ட ரயில்களில் டிக்கெட் புக் செய்த பயணிகளுக்கு முழு தொகையையும் திரும்பி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரயில்வே ஆகஸ்ட் 12ம் தேதி வரை தனது ரயில்சேவைகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.


Google+ Linkedin Youtube