ரூ.44.5 கோடி ரயில்வே ரீபண்ட்

ரத்து செய்யப்பட்ட ரயில்களில், முன்பதிவு செய்திருந்த பயணியருக்கு, முழு கட்டணமும், திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. 'ரீபண்ட்' கட்டணம் பெற, பயண தேதியில் இருந்து, ஆறு மாதங்கள் வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அதன்படி, மே, 22 முதல், நேற்று முன்தினம் வரை, சென்னை, தஞ்சை, திருச்சி, கும்பகோணம், மதுரை, கோவை, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட, முன்பதிவு மையங்களில், 8 லட்சம் பயணியருக்கு, 44.5 கோடி ரூபாய், 'ரீபண்ட்' கட்டணம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்தில், 12.83 கோடி; மதுரை, 4.39 கோடி; சேலம், 6.62 கோடி; திருச்சி, 4.20 கோடி ரூபாய் என, மொத்தம், 44.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Google+ Linkedin Youtube