ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை

திருவனந்தபுரம்

மலையாள நடிகை துர்கா கிருஷ்ணா. இவர் விமானம் என்ற மலையாள படத்தில் பிருதிவிராஜ் ஜோடியாக நடித்து வருகிறார். துர்கா கிருஷ்ணாவுக்கு செல்போனில் ஒருவர் ஆபாச வீடியோவை அனுப்பி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியான அவர் ஆபாச வீடியோ அனுப்பியவரின் புகைப்படத்தை தைரியமாக பேஸ்புக்கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

பேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்த சைக்கோவிடம் இருந்து உங்களின் சகோதரிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள். இதுபோன்றவர்களை தண்டிக்க கோரி அரசிடம் மனு அளிக்க வேண்டும். அப்போதுதான் பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை காப்பாற்ற முடியும். என அதில் குறிப்பிட்டு உள்ளார்.

Google+ Linkedin Youtube