நடிகர் கடத்தி பாலியல் பலாத்காரம் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு

திருவனந்தபுரம்

கேரளாவில் கடந்த பிப்ரவரி 17 ந்தேதி நடிகை பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில்  நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கபட்டார். கிட்டத்தட்ட 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில் ஜாமீனில் வெளிவந்துள்ளார் நடிகர் திலீப். 

இந்த் வழக்கில்  திலீப் 11 வது குற்ரவாளியாக சேர்க்கப்பட்டு  இருந்தார். முதல் குற்றவாளியாக  சுனில் என்கிற பல்சர் சுனி இருந்தார்.

 இந்த வழக்கில் விசாரணை குழு நாளை இறுதி முடிவு எடுக்கிறது. இறுதிகட்ட குற்றபத்திரிகை  அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ளது என மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக உள்ள மொபைல் போனும் அதில் உள்ள வீடியோவும் இன்னும் கைபற்றபடவில்லை. தொடர்ந்து தேடப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது.

குற்றபத்திரிகையில் நடிகர் திலீப் மீது கூட்டு  கற்பழிப்பு, சதி, கடத்தல், ஆதாரங்களை அழித்தல், குற்றம் சாட்டப்பட்டவரின் பாதுகாப்பு அச்சுறுத்தல், சா மற்றும் சட்டவிரோத தடுத்துவைத்தல் உள்பட பல் பிரிவுகள் குறிப்பிடபட்டு உள்ளது.இதனால் அவரை முதல் குற்றவாளியாக சேர்க்கலாம் என கூறப்படுகிற்து

மேலும் அதில்  நேரடி சாட்சியம் மற்றும் மறைமுக சாட்சிய விவரங்களும் குறிப்பிடபட்டு உள்ளன. 

Google+ Linkedin Youtube