மீண்டும் ஜோதி மீனா!

நடிகை ஜோதிலட்சுமியின் மகள் ஜோதி மீனா, அம்மாவைப் போலவே சில படங்களில் கவர்ச்சி நடனம் ஆடினார். அவருடைய கவர்ச்சி நடன மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது, காதல் வலையில் சிக்கினார். அம்மாவின் எதிர்ப்பை மீறி, காதலரை ரகசிய திருமணம் செய்தார். திருமணத்துக்குப்பின், அவர் படங்களில் நடிக்கவில்லை.

சில வருட இடைவெளிக்கு பிறகு அவருக்கு மீண்டும் நடிக்கும் ஆசை வந்து இருக்கிறது. ‘‘பொருத்தமான கதாபாத்திரங்கள் அமைந்தால், நான் மறுபடியும் நடிக்க தயார்’’ என்று அவர் கூறியிருக்கிறார்!

Google+ Linkedin Youtube